தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே மதுபோதையில் தினமும் டார்ச்சர் செய்து வந்த கணவரை, கல்லால் தாக்கி மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீரபாண்டியபட்டணத்தில் உரக்கடை நடத்தி வந்த சண்முகபுரத்தை சேர்ந்த சேர்மத்துரைக்கு, மனைவி மீனாதேவி மற்றும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த சூழலில், சேர்மத்துரை தினமும் மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்ததால் மீனாதேவி கல்லை எடுத்து தாக்கினார்.