சேலம்... உடல் முழுவதும் நெருப்பு பற்றி எரிந்து வீட்டுக்குள் இருந்து மீட்கப்பட்ட கணவன்-மனைவி. சம்பவம் நடந்த அன்றே உயிரிழந்த மனைவி. கடைசிநேர வாக்குமூலம் கொடுத்துவிட்டு மறுநாள் உயிரிழந்த கணவன். தம்பதி நெருப்பை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார்களா? கணவன் கடைசிநேர வாக்குமூலத்தில் கூறியுள்ளது என்ன?சேலம், சிவதாபுரம் பக்கத்துல உள்ள பனங்காடு பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தனபால். இவருக்கும் பிரியாங்குற பொண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால கல்யாணமாகிருக்குது. இந்த தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் இருக்காங்க. பிரியா, சேலத்தாம்பட்டியில உள்ள ஒரு வெள்ளிப் பட்டறையில வேலை பாத்துட்டு இருந்துருக்காங்க. வேலைக்குப்போன கொஞ்சநாள் மனைவியோட நடத்தையில எந்த மாற்றமும் இல்ல. ஆனா, சில மாதங்களுக்குபிறகு அவங்களோட நடவடிக்கையில நிறைய மாற்றத்த கவனிச்சிருக்காரு தனபால். சீக்கிரமா வேலைக்குப்போறது, லீவு எடுக்காம வேலைக்குப்போறது, அடிக்கடி போன் பேசுறது, கணவன்-பிள்ளைகள் மேல பெருசா கவனம் செலுத்தாம இருக்குறதுனு அவங்க நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.வழக்கமா, பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்கி வெளிய அழைச்சிட்டுப்போற பிரியா, வெள்ளிப் பட்டறைக்கு வேலைக்கு போனபிறகு அத கண்டுக்கவே இல்ல. அதனால, ஏன் முன்ன மாதிரி வீட்ல இருக்கமாட்டேங்குற? என்னாச்சு? பிள்ளைகள்மேலகூட அக்கறை காட்டமாட்டேங்குறனு மனைவிக்கிட்ட கேட்ருக்காரு தனபால். அதுக்கு சரியா ரெஸ்பான்ஸ் பண்ணாத பிரியா, பிள்ளைகள் வளந்துட்டாங்க, இனி அவங்கள அவங்களே பாத்துப்பாங்க சும்மா கேள்வி கேட்டுட்டே இருக்காதீங்கனு கடுப்பாகிருக்காங்க. இதுக்கு இடையில மனைவியோட செல்போனுக்கு ஒரே எண்ல இருந்து அடிக்கடி போனும் எஸ்எம்எசும் வந்துருக்குது. இத கவனிச்ச தனபால், யாரு அடிக்கடி போன் பண்றது? எதுக்காக போன் பண்றாங்கனு கேட்ருக்காங்க. அப்போ, யாரு போன் பண்ணினா உங்களுக்கென்னனு முகத்துல அடிச்சமாதிரி பேசிருக்காங்க மனைவி. அப்பதான் பிரியாமேல தனபாலுக்கு சந்தேகமே வந்துருக்குது. அதுக்குப்பிறகு மனைவியோட செல்போனை எடுத்து செக் பண்ணிருக்காரு. அதுல, வெள்ளிப் பட்டறை ஓனர் தான் பிரியாகிட்ட அடிக்கடி போன் பண்ணி பேசிருக்குறதும், எஸ்எம்எஸ் பண்ணிருக்குறதும் தெரிஞ்சிருக்குது. அதேமாதிரி, வெள்ளிப் பட்டறை ஓனரும் பிரியாவும் தகாத உறவுல இருக்காங்க அப்டிங்குறதுக்கு ஆதாரமா சில எஸ்எம்எஸ்கள், போட்டோக்கள் இருந்துருக்குது. அத பாத்து மனசு ஒடஞ்சிபோன தனபால், மனைவிக்கு அட்வைஸ் பண்ணினதோட அழுதுருக்காரு. நாலு பிள்ளைகள் இருக்குது, அவங்களோட எதிர்காலமே வீணாகிரும், தகாத உறவை கைவிட்ருனு சொல்லிருக்காரு. அந்தநேரம் சரினு சொன்ன பிரியா, கடந்த ஆறு மாசமா தகாத உறவை கைவிடலனு தெரியுது. அதனாலேயே, தம்பதிக்குள்ள நித்தம் சண்டையா இருந்துருக்குது. அப்படிதான், சம்பவத்தன்னைக்கும் சண்டை நடந்துருக்குது. பிள்ளைகள் நாலுபேரும் டியூஷன் போனதால் வீட்ல கணவனும்-மனைவியும் மட்டும்தான் இருந்துருக்காங்க. அதனால், வாக்குவாதம் வளர்ந்துட்டே போயிருக்குது. ஒருகட்டத்துல ஆத்திரமடைஞ்ச பிரியா, பெட்ரோலை எடுத்து தன்மேல ஊத்தினதோட கணவர்மேலயும் ஊத்திருக்காங்க. அடுத்து கிச்சன்ல இருந்து தீப்பெட்டிய எடுத்து பத்த வச்சி ரெண்டுபேருமேலயுமே வீசிருக்காங்க. அதுல, உடல் முழுவதும் நெருப்பு பத்திக்கிட்டு ரெண்டுபேருமே அலறிருக்காங்க. சத்தங்கேட்ட அக்கம்பக்கத்தினர் உள்பக்கமா தாழ்ப்பாள் போடப்பட்ருந்த கதவை உடைக்க முயற்சி பண்ணாங்க. ஆனா, முடியல. அதுக்குப்பிறகுதான் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் குடுத்துருக்காங்க. நடந்த அத்தனை விஷயத்தையும் வாக்குமூலமா குடுத்த தனபால், மனைவி உயிரிழந்த மறுநாளே சிகிச்சையில முன்னேற்றம் இல்லாததால உயிரிழந்துட்டாரு. கணவன் கண்டிச்சபோதே மனைவி காது குடுத்து கேட்ருந்தா இன்னைக்கு ரெண்டுபோராட உயிரும் போயிருக்காது. பிள்ளைகள் நாலுபேரும் எந்த ஆதரவும் இல்லாம நிற்கதியா நின்னுருக்கவும் மாட்டாங்க.இதையும் பாருங்கள் - 5 சவரன் நகைக்காக நடந்த பயங்கரம்