ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே ஆசனூரில் லாரியை வழிமறித்து கரும்பு உள்ளதா என காட்டு யானை சோதனையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. யானைகள் அதிகம் நடமாட்டமுள்ள இந்த பகுதியில், வாகன ஓட்டிகள் கவனமுடன் சென்று வரும் நிலையில், யானை கரும்பை தேடும் புதிய வீடியோ வெளியாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று அச்சமடைந்துள்ளனர்.