திண்டுக்கல் மாவட்டம், சோமலிங்கபுரம் பகுதியில் கிணற்றில் தவறிவிழுந்த பத்திற்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகளை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். சக்திவேல் என்பவரது தோட்டத்தில் உள்ள 80 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில், காட்டுப்பன்றிகள் வழித்தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.