பழனி பாத யாத்திரைக்கு சென்றுவிட்டு ஊருக்கு வந்த ஆட்டோ டிரைவர். வந்த சில நிமிடங்களிலேயே ஆட்டோவை வழிமறித்து அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டு எஸ்கேப் ஆன 5 பேர் கொண்ட கும்பல். ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டது ஏன்? அரிவாளால் வெட்டிக் கொன்ற கும்பலுக்கும் ஆட்டோ டிரைவருக்கும் என்ன சம்மந்தம்? கொலை கும்பல் சிக்கியதா?மதுரை ஏர்போர்ட் பக்கத்துல உள்ள பெருங்குடி விருசமரத்தூரணி பகுதியை சேர்ந்தவர் தான் 27 வயசான இளைஞர் முனீஸ்வரன். இவரு மண்டேலா பகுதியில ஆட்டோ ஓட்டிட்டு இருந்துருக்காரு. முனீஸ்வரனோட நண்பரான ஆட்டோ ஓட்டுநர் முருகனை அதே பகுதியை சேர்ந்த திருமுருகன், அருணாச்சலம், தண்டபாணி, சக்திவேல், கார்த்திக் அஞ்சுபேரும் கடந்த சில மாசத்துக்கு முன்னால அடிச்சிருக்காங்க. ஸ்டாண்ட்ல ஆட்டோ நிறுத்துறது சம்மந்தமா நடந்த பிரச்சனைதான் அடிதடியில முடிஞ்சிருக்கு. முருகனுக்கு சப்போர்ட் பண்ணி அந்த அஞ்சுபேரையும் திட்டுன முனீஸ்வரன், ஏரியாவுல எனக்குனு ஒரு கெத்து இருக்குது, பிரச்சனை பண்ணா என்னோட அண்ணன், தம்பிகள், நண்பர்கள் யாரும் உங்கள சும்மா விடமாட்டாங்கனு மிரட்டுனதா சொல்லப்படுது.அதுக்கு, ஏரியாவுல பெரிய ஆளுனு பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் இங்க வேண்டாம்னு முனீஸ்வரனை பதிலுக்கு மிரட்டுன அந்த அஞ்சுபேரும் சப்போர்ட்டுக்கு ஆளு கூப்ட்ரு வர்றயா? சப்போர்ட்டுக்கு வர்ற யாரா இருந்தாலும் உசுரோட இருக்கமாட்டாங்கனு முருகனையும் மிரட்டிருக்காங்க. இந்த தகராறு கடந்த சில மாசங்களாகவே ரெண்டு தரப்புக்கும் இடையில இருக்குது. அடிக்கடி கைகலப்பும் ஆகிருக்குது. அதனால, ஆத்திரமடைஞ்ச திருமுருகன் டீம் முனீஸ்வரனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்ருக்காங்க. அதனாலயே, முனீஸ்வரன் தனியா எப்ப சிக்குவாருனு நேரம்பாத்து காத்துட்டு இருந்தாங்க திருமுருகன் டீம். இதுக்குமத்தியிலதான் பழனி கோவிலுக்கு பாதயாத்திரைக்கு போயிட்டு வந்த முனீஸ்வரன், தன்னோட தங்கச்சிய தூத்துக்குடிக்கு வழியனுப்பி வச்சிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துருக்காரு. அப்பதான், இந்த கொடூர கொலை நடந்துருக்குது. சொந்தபந்தங்கள் வீட்டுல பதுங்கி இருந்த அஞ்சுபேரையும் அடுத்த சிலமணிநேரத்துலயே கைது பண்ண அவனியாபுரம் போலீசார், அவங்ககிட்ட இருந்து அரிவாள், கத்தினு ஆயுதங்களையும் பறிமுதல் பண்ணிருக்காங்க.