திருப்பத்தூரில் கணவர்களோடு சேர்ந்து மனைவிகளும் கஞ்சா கடத்தியதாக நான்கு பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து கார் மற்றும் 20 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். தோரணம்பதி சோதனை சாவடியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற காரை மடக்கி அதில் இருந்துவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது 4 பேர் வெளிமாநிலத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.