கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது போக்குவரத்து சீராகியுள்ளது. மண் சரிவு ஏற்பட்ட இடங்கள் சரிசெய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில், வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். தொடர்ந்து அருவியில் குளித்தும், படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.