சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நிலவும் கடும் பனிமூட்டம் மற்றும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியது. ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டில் மூன்றாவது நாளாக தொடரும் கடும் பனிமூட்டத்தால் பள்ளிக் குழந்தைகள், தோட்ட தொழிலாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மக்கள் வீடுகளிலும் சுற்றுலா பயணிகள் விடுதிகளிலே முடங்கும் நிலை ஏற்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவு பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.