Also Watch
Read this
Posted on: Mar 04, 2026 09:20 AM
By: Fyrose Banu

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஆபத்தான நிலையில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ள மின்கம்பியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை அடுத்து மிகப்பெரிய ரயில் சந்திப்பு நிலையமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வேலை, படிப்பு, வணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னை வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
தொங்கி கொண்டிருக்கும் மின்கம்பி
தற்போது அரக்கோணம் ரயில் நிலையத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரக்கோணத்தில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் மேலிருந்து கீழ் நோக்கி வந்த வயர் ஒன்று ஆபத்தான முறையில் அங்குள்ள ஸ்டீல் கைப்பிடியில் சுற்றப்பட்டு இருந்த நிலையில் காணப்படுகிறது.
தொங்கி கொண்டிருக்கும் மின்கம்பி
இதனை கவனித்த பயணி ஒருவர் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ள வயரை உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் அகற்ற வேண்டும் என கோரிக்க வைத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved