தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. மேலும் இந்த கோவில் கடலானது புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் தற்போது பாதயாத்திரை பக்தர்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ள நிலையில், பாதயாத்திரை வந்த பக்தர்கள் தவெக கொடியுடன் வந்தனர். கோவில் நடுக்கடலில் சென்று தவெக கொடியை கையில் ஏந்தியவாறு நின்றனர். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.இதையும் படியுங்கள் : திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்