மயிலாடுதுறை அருகே 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இன்னும் விசாரணை முடியவில்லை என மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டதாக தெரியவந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.