நெல்லை மாவட்டம் வள்ளியூர் சாலையில் விலை உயர்ந்த பைக்கில் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வள்ளியூர் தேசிய சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையில் இளைஞர் ஒருவர் பைக்கில் சாகசத்தில் ஈடுபட்டதால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.