திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் இறந்த குழந்தையுடன் கணவர் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்ணால் பரபரப்பு நிலவியது. மடத்துக்குளத்தை சேர்ந்தவர்கள் கார்த்தி- இந்துமதி தம்பதி. காதல் திருமணம் செய்த தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்துமதிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்து உயிரிழந்தது. இறந்த குழந்தையை பார்க்க கணவர் குடும்பத்தினர் வராததால் குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு வந்த இந்துமதி வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டு முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த போலீசார் இந்துமதியின் பேசி குழந்தையை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.