நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையம் அருகே உள்ள 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூட்டாடா பகுதியை சேர்ந்த பிலிப் ஜான் என்பவர் தவறி விழுந்த நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டார்.