புதுச்சேரி உருளையன்பேட்டை அருகே விடுதியில் அறை எடுத்து தங்கி அங்கிருந்த எல்.இ.டி டிவியை திருடிச் சென்ற இளைஞர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விடுதி அறையில் தங்கிய காரைக்கால் அடுத்த திருநள்ளாறை சேர்ந்த தினேஷ் என்பவர், எல்இடி டிவியை கழற்றி பெட்ஷீட்டில் சுற்றி திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.