மத்திய பிரதேசத்தில் ஜிபிஎஸ் சிண்ட்ரோம் நோய் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்த நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீமுச் மாவட்டம் மானசா நகரில் "குல்லெய்ன் பார் சிண்ட்ரோம்" (ஜிபிஎஸ்) என்ற நோய் எதிர்ப்பு நரம்பு பாதிப்பு புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. எனவே, இந்நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களை அடையாளம் கண்டு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கழிவுநீர் கலந்த குடிநீரை பருகுவது, முழுமையாக வேக வைக்கப்படாத கோழி இறைச்சி மற்றும் பதப்படுத்தப்படாத பால் பொருள்களை உண்பது போன்ற காரணங்களால் இந்நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதையும் படியுங்கள் : "உமர் காலித்தின் வாழும் உரிமை பாதிக்கப்படுகிறது"