இந்திய கடற்படைக்காக புதிதாக 26 ரஃபேல் விமானங்கள் வாங்கவுள்ளதாக கடற்படை தளபதி தினேஷ்குமார் திரிபாதி கூறினார். ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலுக்காக ரஃபேல் விமானங்கள் வாங்கப்படுவதாகவும், இதற்கான ஒப்பந்தம் வரும் ஜனவரியில் கையெழுத்தாகும் என்றும் கூறினார்.மேலும் பிரான்ஸிடமிருந்து அதிநவீன 3 நீர்மூழ்கிகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.