எல்ஐசியில் பாலிசி வைத்திருக்கும் சுமார் 30 கோடி சாதாரண மக்களின் பணத்தை எடுத்து மோடி தனது நெருங்கிய கூட்டாளியான அதானிக்கு வழங்கி இருப்பது வடிகட்டிய கொள்ளை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து பொதுமக்களின் பாலிசி பணத்தை வழங்கி அதானியை அவர் காப்பாற்றுவதாகவும் கார்கே எக்ஸ் தளத்தில் குற்றஞ்சாட்டி உள்ளார். சுமார் 33 ஆயிரம் கோடி ரூபாயை எல்ஐசியிடம் இருந்து பறித்து அதானிக்கு வழங்கியதில் மோடியின் கரங்கள் உள்ளதாகவும், மோசமான கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதானிக்கு இப்படி ஏழை மக்களின் பணத்தை எடுத்து கொடுக்கலாமா எனவும் கார்கே கேள்வி எழுப்பி உள்ளார். அதானிக்கு பணம் கொடுக்க எல்ஐசி வற்புறுத்தப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தின் பொது கணக்கு குழு மூலம் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.இதையும் படியுங்கள் : எல்ஐசியின் பணம் அதானிக்கு வழங்கப்படுவதாக வெளியான செய்தி