ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் இருந்து திருமண கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு ஜார்கண்டின் லாத்தேஹார் நோக்கி சென்ற பேருந்து, ஓர்சா பங்களாதாரா பள்ளத்தாக்கு பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 25-க்கும் மேற்பட்டோரு மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதையும் படியுங்கள் : ஜிபிஎஸ் சிண்ட்ரோம் நோய் பாதிப்பால் 2 பேர் உயிரிழப்பு