பல முறை கண்டித்த பின்பும், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த தம்பியை, அண்ணன் கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசிய சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 24 வயதான தனராஜ், சிறைக்கு சென்று வந்ததோடு, பெற்றோரையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை சகித்துக் கொள்ளமுடியாமல் அவரது அண்ணன் ஷிவராஜ் தனராஜை கொலை செய்துள்ளார்.