Also Watch
Read this
Posted on: Mar 02, 2026 01:26 PM
By: Manigandan Raja

போக்குவரத்து காவலர் மீது மோதிய கார் :
ஹைதராபாத்தில் உள்ள கட்ச்பள்ளி பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், உயர்ரக குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் வாலிபர் தருண். அவர் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தொடர்ந்து இரண்டு நாட்கள் நண்பர்களுடன் செய்து மது அருந்தினார்.
இந்த நிலையில் திடீரென்று ஊர் சுற்ற நினைத்த அந்த வாலிபர் தன்னுடைய சொகுசு காரை எடுத்துக் கொண்டு மதுபோதையில் கிளம்பினார். அப்போது காரை வேகமாக ஓட்டி இரண்டு கார்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய அவர் நிற்காமல் சென்று விட்டார்.
இந்த நிலையில் இது பற்றி வயர்லெஸ் தகவல் அறிந்த ட்ராபிக் காண்ஸ்டபிள் நரசிங்கலு அந்த காரை தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது கார் போலீஸ் காண்ஸ்டபில் மீது மோதி அவர் காரின் முன் பகுதி மீது விழுந்தார்.
ஆனாலும் தருண் காரை நிறுத்தாமல் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வேகமாக காரை ஓட்டி சென்றார். அந்த ஒரு கிலோமீட்டர் தொலைவும் போலீஸ்காண்ஸ்டபிள் உயிரைக் கையில் பிடித்துக்
கொண்டு காரில் தொங்கிக் கொண்டிருந்தது பரிதாபமாக காட்சி அளித்தது.
அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தருண் ஓட்டி சென்ற சொகுசு காரை மடக்கி பிடித்து போலீஸ் காண்ஸ்டபிளை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து தருனுக்கு தரும அடி கொடுத்த பொதுமக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
தருணை கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved