பீகார்... காட்டுப்பகுதியில் தலையில்லாமல் கிடந்த இளைஞரின் சடலம். சடலத்தை மீட்டு விசாரணையில் இறங்கிய போலீஸ். மனைவியின் செல்போனை ஆய்வு செய்ததில் காத்திருந்த அதிர்ச்சி. அடுத்தடுத்த விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள். இளைஞர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? பின்னணி என்ன? பீகார்ல உள்ள சுயியா பகுதிய சேந்த சுபோத் குமார் ஒரு தனியார் நிறுவனத்துல வேலை செஞ்சுட்டு இருந்தாரு. சில வருஷங்களுக்கு முன்னாடி இவருக்கு அர்ச்சனா குமாரி-ங்குற பெண் கூட கல்யாணமாகிருக்கு. கல்யாணமாகி கொஞ்சம் நாட்கள் வர்ற சந்தோஷமா இருந்த இந்த தம்பதிக்குள்ள கருத்து வேறுபாடு ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. தொட்டதுக்கெல்லாம் இந்த தம்பதி சண்டை போட்டுட்டு இருந்துருக்காங்க. இதுக்கிடையில அர்ச்சனாவுக்கும் அதே ஏரியாவ சேந்த இளைஞர் மனோஜ்க்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கு. கணவன் வேலைக்கு போனதுக்கு அப்புறம் அந்த இளைஞர அடிக்கடி வீட்டுக்கு கூப்டுற அர்சனா அவரோட தனிமையிலையும் இருந்துருக்காங்க.இதுக்கிடையில, மனைவி அர்ச்சனாவோட நடவடிக்கையில சுபோத் குமாருக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சுருக்கு. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி நைட்டு நேரத்துல அர்ச்சனா, அந்த இளைஞர் கூட ஃபோன் பேசிட்டு இருந்துருக்காங்க. இதபாத்து கோபமான சுபோத், இந்த நேரத்துல யார் கூட பேசிட்டு இருக்கன்னு கேள்வி கேட்டு, அர்ச்சனா கிட்ட இருந்து ஃபோன பிடுங்கி எதிர்முனையில பேசுன மனோஜ திட்டிருக்காரு. அதே மாதிரி அர்ச்சனாவையும் சரமாரியா அடிச்சுருக்காரு சுபோத் குமார். கணவனோட நடவடிக்கைய பாத்து கோபமான அர்ச்சனா, சுபோத் உயிரோட இருக்குற வர காதலன் கூட நிம்மதியா இருக்க முடியாதுன்னு நினைச்சு காதலன் கூட சேந்து கணவன கொலை செய்ய திட்டம் போட்ருக்காங்க. இந்த கொலை திட்டத்துல மனோஜ் யாதவ் தன்னோட நண்பர் ஒருத்தரையும் உடன் சேர்த்துக்கிட்டாரு.சம்பவத்தன்னைக்கு நைட்டு சுபோத்குமார் வீட்ல தூங்கிட்டு இருந்தாரு. அப்ப தன்னோட காதலன் மனோஜ்க்கு ஃபோன் பண்ண அர்ச்சனா, அவரையும், நண்பரையும் வீட்டுக்கு வரவச்சு சுபோத்குமார சரமாரியா தாக்கிருக்காங்க. அதுக்கப்புறம் சுபோத் குமார பக்கத்துல உள்ள காட்டுப்பகுதிக்கு கூப்டுட்டு போன அந்த நபர்கள், மறைச்சு வச்சுருந்த கத்திய வச்சு அவரோட கழுத்த அறுத்துருக்காங்க. அடுத்து தலைய துண்டா அறுத்து எடுத்த அந்த கொலையாளிகள், போலீஸ சுத்தல்ல விட சடலத்த அங்கையே போட்டுட்டு, தலைய வேற ஒரு பகுதியில வீசிட்டு தப்பிச்சுட்டாங்க. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ், அர்ச்சனா குமாரி அவரோட கள்ளக்காதலன் உள்ளிட்ட 3 பேர அரெஸ்ட் பண்ணிட்டாங்க. இதையும் பாருங்கள் - 6 வயது சிறுமி துடிதுடித்து பலியான சோகம்