குவைத்தில் நர்சுகளாக பணியாற்றும் போது Gulf Bank of Kuwait ல் இருந்து கடன் வாங்கி விட்டு ஏமாற்றி விட்டதாக கேரளாவில் ஆயிரத்து 400 பேர் மீது அந்த வங்கி கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளது. எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்ட காவல் நிலையங்களில் பதிவான இந்த வழக்குகளில் எப்படி நடவடிக்கை எடுப்பது என போலீசார் குழப்பத்தில் உள்ளனர். குவைத்தில் பணியாற்றும் போது சம்பள சான்றிதழின் அடிப்படையில் இவர்கள் கடன் பெற்று விட்டு திருப்பிச் செலுத்தாமல் கேரளாவுக்கு திரும்பி விட்டதாக Gulf Bank of Kuwait ன் துணை பொது மேலாளரான முகம்மது அப்துல் வெஸ்ஸை கம்ரான் என்பவர் புகார் அளித்துள்ளார். நர்சுகள் முறையான சான்றிதழை அளித்தே கடன் பெற்றதாகவும், போலி ஆவணங்களை வழங்கவில்லை என்பதால் எப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும் என கேரள போலீஸ் வட்டாரங்கள் கேள்வி எழுப்பி உள்ளன