டெல்லியில் ராஜோரி கார்டன் பகுதியில் செயல்பட்டு வரும் Jungle Jamboree என்ற தனியார் உணவகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், அங்கு சிக்கிக் கொண்ட மக்கள் உணவகத்தின் மாடியில் இருந்து அடுத்த கட்டடத்திற்கு குதித்து உயிர்தப்பிய பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன. தகவலறிந்து 10 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.