பணி முடித்துவிட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த வங்கி பெண் ஊழியர். பெண்ணை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர். கண்ணிமைக்கும் நேரத்தில் வங்கி ஊழியரை துப்பாக்கியல் சுட்டு கொன்ற கொடூரம். ரத்தவெள்ளத்தில் கிடந்த பெண்ணை பார்த்து கதிகலங்கிய பொதுமக்கள். நடுரோட்டில் வைத்து பெண் ஊழியரை சுட்டு கொன்றது யார்? கொலையாளி சிக்கினானா? பின்னணி என்ன? சேலம் மாவட்டத்த சேர்ந்தவர் 40 வயசான பாலமுருகன். இவரு 2011-ல அதே ஊர சேர்ந்த புவனேஸ்வரி-ங்குற பெண்ண கல்யாணம் பண்ணிருக்காரு. இந்த தம்பதிக்கு ரெண்டு குழந்தைகள் இருக்காங்க. பாலமுருகனுக்கு சொந்த ஊர்ல வேலை கிடைக்காததால குடும்பத்தோட பெங்களூருக்கு போயிருக்காங்க. அங்க, போனதும் அவருக்கு ஐடில வேலை கிடைச்சிருக்கு. மனைவி புவனேஸ்வரிக்கு பிரைவேட் பேங்க்ல மேனேஜர் போஸ்டிங்கும் கிடைச்சிருக்கு. இப்படி வாழ்க்கை நல்லபடியா போயிட்டு இருந்த நேரத்துல, பாலமுருகன வேலையில இருந்து தூக்கிருக்காங்க.அதுக்கப்புறம், எங்கேயும் வேலை கிடைக்காம வீட்டுலே இருந்தவரு மதுபோதைக்கு அடிமையாகிருக்காரு.எந்நேரமும் குடியும் கும்மாளமுமாவே பாலமுருகன், பிள்ளைங்களோட கல்விக்காகவும், வீட்டுச் செலவுக்காகவும் மனைவி கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வச்சிருந்த காச எடுத்துட்டு போய் குடிச்சிட்டு வந்துருக்காரு.மனைவி காசுல மூக்கு முட்ட குடிச்சிட்டு, அதே மனைவிய தகாத வார்த்தைகளால பேசி அடிச்சு, ரகளை பண்ணிருக்கான் கணவன் பாலமுருகன். இதுக்கு இடையில, மனைவி புவனேஸ்வரியோட நடத்தை மேல பாலமுருகனுக்கு சந்தேகம் வந்திருக்கு. குடிபோதையினால வீட்டுல ஏற்பட்ட பிரச்சினை போய், கடந்த சில நாட்களா மனைவியோட நடத்தை மேல சந்தேகப்பட்டு பாலமுருகன் சண்ட போட்டுருக்கான்.கணவன் கொடுக்குற டார்ச்சர தாங்க முடியாம ராஜாஜிநகர்ல ஒரு வீட்ட வாடகைக்கு எடுத்து தன்னோட பிள்ளைகளோட கடந்த ஒரு வருஷமா தனியா வாழ்ந்துட்டு வந்துருக்காங்க புவனேஸ்வரி. இதுக்கு இடையில, அடிக்கடி புவனேஸ்வரி வீட்டுக்கு போன பாலமுருகன், தன்கூட வீட்டுக்கு வரச்சொல்லி கேட்டுருக்கான். ஆனா, இனிமே உன் கூட என்னால வாழ முடியாதுன்னு புவனேஸ்வரி திட்டவட்டமா சொல்லிருக்காங்க. அதுமட்டுமில்லாம, விவாகரத்து கேட்டு பாலமுருகனுக்கு கோர்ட்டு மூலம் புவனேஸ்வரி நோட்டீஸ் அனுப்பிருக்காங்க. அந்த நோட்டீஸ பாத்ததும் கொந்தளிச்சு போன பாலமுருகன், என்கூட வந்து வாழ மாட்டேன்னு முடிவு எடுத்ததுக்கு அப்புறம் நீ, இந்த உலகத்துலேயே வாழக்கூடாதுன்னு சொல்லி, மனைவிய கொலை செய்ய பிளான் போட்டுருக்கான். புவனேஸ்வரிய கதைய முடிக்க ஆன்லைன் மூலமா கூலிப்படைய அமைக்க முடிவு பண்ணிருக்கான். ஆனா. அதுல யாரும் அவன் பேசுன பணத்துக்கு சம்மதிக்கல.அதுக்குப்பிறகு, சேலத்துக்கு கிளம்பி போன பாலமுருகனுக்கு அங்க கூலிப்படைய சேர்ந்த மெளலேஷ்-ங்குறவர் அறிமுகமாகிருக்கான். அவன ஒரு ஹோட்டலுக்கு கூப்பிட்டுட்டு கொலைக்கு பேரம் பேசுனதோட அட்வான்ஸ் பணமா ஒன்றரை லட்சம் கொடுத்திருக்கான். பாலமுருகன் சொன்ன மாதிரியே பெங்களூருவுக்கு வந்த மெளலேஷ், புவனேஸ்வரியோட மூவ்மெண்ட்ஸ் எல்லாத்தையும் நோட் பண்ண ஆரம்பிச்சிருக்கான். இதுக்கு நடுவுல, திடீர்னு பாலமுருகனுக்கு ஃபோன் பண்ண மெளலேஷ் என்னால கொலையெல்லாம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு, மறுபடியும் சேலத்துக்கே கிளம்பி போயிட்டான். அது பாலமுருகனுக்கு கடும் ஆத்திரத்த ஏற்படுத்திருக்குது. நம்ம போட்ட பிளான் எல்லாம் சொதப்புல போய் முடியுதேன்னு நினைச்ச பாலமுருகன், கடைசியா அவனே களத்துல இறங்கிருக்கான். சம்பவத்தனைக்கு, புவனேஸ்வரி வேலை பாக்குற பேங்க் வாசல்ல மறைஞ்சு நின்னுட்டு இருந்த பாலமுருகன், அவங்க தன்னோட பைக்க எடுத்து வீட்டுக்கு கிளம்பபோது ஃபாலோ பண்ணிட்டே போயிருக்கான். அப்போ, ஒரு இடத்துல புவனேஸ்வரிய வழிமறிச்சு வாக்குவாதத்துல ஈடுபட்டவன், திடீர்னு தான் மறைச்சு வச்சிருந்த துப்பாக்கிய எடுத்து அவங்கள நடுரோட்டுல வச்சு நாலஞ்சு முறை துப்பாக்கியால சுட்டு துடிதுடிக்க கொன்னுட்டு தப்பிச்சு போயிருக்கான்.போலீஸ்காரங்க, எப்படியும் நம்மல பிடிச்சிருவாங்க, அதுக்கு முன்னாடி நாமலே சரணடஞ்சிருவோம்னு முடிவு பண்ண பாலமுருகன், பெங்களூரு போலீஸ் ஸ்டேஷன்ல போய் சரணடைஞ்சிருக்கான். அதுக்கப்புறம், அவன்கிட்ட நடத்துன விசாரணையிலதான் இந்த கொலைக்கான காரணம் தெரியவந்துச்சு. அடுத்து, பாலமுருகன் மேல கொலை வழக்குப்பதிவு பண்ண போலீஸ் நீதிமன்றத்துல ஆஜர்படுத்தி சிறையில தள்ளிருக்காங்க. இதையும் பாருங்கள் - காணாமல் போன பெண் சடலமாக மீட்பு