விமானங்கள் சேவையை தொடங்குவதற்கு, அல் ஹிந்த் ஏர், ஃப்ளை எக்ஸ்பிரஸ், ஷாங்க் ஏர் ஆகிய 3 புதிய நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தடையில்லாச் சான்றிதழ்களைப் பெற்றுள்ள 3 நிறுவனங்களும் சேவையைத் தொடங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த 3 விமான நிறுவனங்களிடம் இருந்தும் வழித்தடங்கள் மற்றும் பயன்படுத்தவிருக்கும் விமானம் குறித்து மத்திய அமைச்சகம் அறிக்கை கேட்ட நிலையில், விரைவில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.