டெல்லியில் செயற்கை மழையை பெய்விக்க அரசு எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. சுமார் ஒன்றேகால் கோடி ரூபாய் செலவில், செஸ்னா விமானம் மூலம் விண்ணில் சில்வர் ஐயோடைடை தூவி செயற்கை மழையை பெய்விக்கும் பணி நேற்று மாலை நடைபெற்றது. ஆனால் டெல்லிக்கு மேல் கார்மேகங்களுக்கு பதிலாக மாசடைந்த மேகங்கள் உலவியதால் செயற்கை மழை முயற்சி தோல்வி அடைந்தது.கான்பூர் IIT உடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த முயற்சி தோல்வி அடைந்தாலும், அடுத்த சில தினங்களில் மேலும் 10 முறை செயற்கை மழைக்கான முயற்சி எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் இயற்கையாகவே மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், செயற்கை மழை என்ற பெயரில் அரசு பணத்தை வீண்டிப்பதாக பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.