அஸ்ஸாமில் உணவு விடுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் மாட்டிறைச்சி உணவுகளை பயன்படுத்த தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக மாநில அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.