கர்நாடக மாநில விவகாரத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அம்மாநில துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.பெங்களூருவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடிசைகளை அம்மாநில அரசு அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்த பினராய் விஜயன், புல்டோசர் ஆக் ஷன் என சாடியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டிகே சிவக்குமார், பெங்களூருவை பற்றி காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றாக தெரியும் என்றும், பினராயி விஜயன் அவரது மாநிலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.