திரிபுராவில், வங்கதேச சுற்றுலா பயணிகளுக்கு ஹோட்டல் அறைகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட மாட்டது என திரிபுரா ஹோட்டல் அசோசியேஷன் அறிவித்துள்ளது இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது. வங்கதேசத்தில் இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கும், இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.