பாஜக வெற்றி பெற முடியாது : மேற்குவங்கத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவால் 30 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார். மேலும், மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சர் ஆவார் எனவும், மண்ணைக் கவ்வும் பாஜக எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தக்க வைத்துக்கொள்ள முடியாது எனவும் கூறினார். ஓட்டுக்கேட்டு மக்களை சந்திக்கும்போது, மேற்குவங்க ஏழை மக்களுக்கான 1 புள்ளி 86 லட்சம் கோடி ரூபாய் நிதியை இதுவரை விடுவிக்காதது குறித்து பாஜக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். Related Link 2 நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி