பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதிகார குவிப்பை விரும்புவதாகவும், ஆனால் காங்கிரஸ் மட்டுமே அதிகாரப்பரவலை விரும்புவதாகவும் ராகுல்காந்தி கூறியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மகா பஞ்சாயத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், சில கார்ப்பரேட் முதலாளிகள் மட்டும் செழித்து வளர வேண்டும் என பாஜக விரும்புவதாகவும், மக்களின் குரலை கேட்க அவர்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். தேசத்தின் சொத்துக்குள் மீது ஆதிக்கம் செலுத்தும் பெரு நிறுவனங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில், மக்களின் ஜனநாயக குரலை மத்திய பாஜக அரசு ஒடுக்குவதாகவும் புகார் கூறினார்.இதையும் படியுங்கள் : மருத்துவமனைக்குள் புகைபிடித்தபடியே சென்ற எம்.எல்.ஏ.