இன்று பிறந்த நாள் காணும் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் தளத்தில் சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ள பிரதமர் மோடி. சோனியா காந்தி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் மிக நீண்டகாலம் தலைவராக இருந்த சோனியா காந்தி, உடல் நிலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். தற்போது மாநிலங்களவை எம்பியாகவும், காங்கிரசின் நாடாளுமன்ற கட்சித் தலைவராகவும் இருக்கும் சோனியா காந்திக்கு இன்று 78 வயதாகிறது.