காலையில் வெகுநேரமாகியும் ரூமைவிட்டு வெளியே வராத இளம்பெண். கதவை திறந்து உள்ளே பார்த்த பெற்றோருக்கு பேரதிர்ச்சி. திருமணமான இரண்டே மாதங்களில் இளம்பெண் விபரீத முடிவை கையில் எடுத்தது ஏன்? கணவன் வீட்டில் அனுபவித்த ரணக்கொடூரங்கள் என்னென்ன? மனசாட்சியே இல்லாத கொடூரன்கள் மீது நடவடிக்கை பாய்ந்ததா?* காலையில் அறையைவிட்டு வெளியே வராத அடாசி* கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி வழக்கமா காலையில சீக்கிரமே எழுந்துருச்சுடுற அடாசி, ரொம்ப நேரமாகியும் ரூம விட்டு வெளிய வராமலே இருந்துருக்காங்க. உடனே தாய், மகளோட ரூமுக்குள்ள போய் பாத்திருக்காங்க. அப்போ, பத்து மாசம் சுமந்து பெத்த மகள், சடலமா தொங்கிட்டு இருந்தத பாத்து, அந்த தாய்க்கு மூச்சே நின்னு போய்ருச்சு.* திருமணமான 2 மாதங்களில் இளம்பெண் விபரீத முடிவு* அடாசியின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீஸ்* விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் தகவல் தெரிஞ்சு சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், அடாசியோட சடலத்த கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வச்சாங்க. அதுக்கப்புறம், அடாசியோட அப்பாகிட்டயும், அம்மாகிட்டயும், வீட்டுல ஏதாச்சு பிரச்சினையா, உங்க பொண்ணு உங்ககிட்ட ஏதாச்சு சொன்னாங்களான்னு விசாரிச்சிருக்காங்க. அப்போ, அவங்க சொன்ன விஷயம், போலீஸ்காரங்க, சொந்தக்காரங்க, அக்கம் பக்கத்துல உள்ளவங்கன்னு எல்லாரோட மனசையும் ரணமாக்கிருச்சு.* 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்த அடாசி - சந்தன்* மகள் அடாசிக்கு ஃபோன் செய்த தாய் அபயாஒடிசா மாநிலம், கியோஞ்சர் பகுதிய சேர்ந்த அபயாவோட மகள் அடாசிக்கும், அதே கிராமத்த சேர்ந்த சந்தனுக்கும் கடந்த ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்திருக்கு. கடந்த சில நாட்களுக்கு முன்னாடி, தாய் அபயா, மகள் அடாசிக்கு ஃபோன் பண்ணிருக்காங்க. அப்போ, ஃபோன் சுவிட்ச் ஆப்ல இருந்துருக்கு. ரொம்ப நேரமா அடாசியோட செல்போன் சுவிட்ச் ஆப்ல இருந்தது, பெத்தவங்களுக்கு பதற்றத்த உண்டாக்கிருக்கு. உடனே சந்தன் செல்போனுக்கு கால் பண்ணி பேசிருக்காங்க. அப்போ, உங்க பொண்ணு ஃபோன் ரிப்பேர் அதனாலதான் சுவிட்ச் ஆப்ல இருக்குன்னு சொல்லிருக்காரு. அதுமட்டுமில்ல, நான் வேலை விஷயமா ஊருக்கு போறேன், அடாசிய உங்க வீட்டுக்கு கூப்டு போங்கன்னும் சொல்லிருக்காரு.* அடாசியை வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர்* கணவன் செய்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறிய அடாசி* மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் அபயாஅதுக்கப்புறம், அடாசியோட தாயும், தந்தையும் சந்தன் வீட்டுக்கு போய் மகள தங்களோட வீட்டுக்கு அழச்சிட்டு வந்திருக்காங்க. அடாசி, தன்னோட அம்மா வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் கணவர் பண்ண கொடுமைகள் எல்லாத்தையும் வாய்விட்டு சொல்லி கதறி அழுதுருக்காங்க. கணவன் சந்தன் தன்ன நிர்வாணப்படுத்தி, அத வீடியோ எடுத்து யாருக்கோ அனுப்புனதாவும், செல்போன்ல ஆபாச வீடியோக்கள பாத்துட்டு வந்து பாலியல் தொல்லை கொடுத்ததாவும் சொல்லி கண்ணீர் வடிச்சிருக்காங்க. அடாசி சொன்ன விஷயங்கள கேட்டு, அவங்க பெற்றோருக்கு தலையில இடி விழுந்த மாதிரி ஆகிருக்கு. அதுமட்டுமில்ல, கல்யாணத்துக்கு செஞ்ச நகை பத்தாதுன்னு சொல்லி, கூடுதல் நகையும், 50 ஆயிரம் பணமும் கேட்டு, கணவன் சந்தன் தெனம் தெனம் அடிச்சு மிதிச்சு சித்ரவதை பண்ணதாவும் அடாசி சொல்லிருக்காங்க.* கணவன் சந்தன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார்* கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த சந்தன்எங்க அம்மா அப்பாவால இதுக்கு மேல நகை, பணம்லாம் கொடுக்க முடியாதுன்னு சொன்னப்போ, காலால கழுத்த நெரிச்சு கொலை பண்ண பாத்ததாவும், வீட்டுல இருந்த கம்பால, கண்மூடித்தனமா அடிச்சு, உடம்பு ஃபுல்லா காயத்த உண்டாக்குனதாவும் சொல்லி கதறிருக்காங்க அடாசி. மகள் சொன்னத கேட்டு கொதிச்சுப் போன தாய் அபயா, மருமகன் சந்தனுக்கு ஃபோன் பண்ணி, இத பத்தி கேட்டுருக்காரு. உடனே, அபயா, மனைவி அடாசிக்கு ஃபோன் பண்ணி, இங்க நடந்ததெல்லாம் உங்க அம்மாகிட்ட சொல்லிட்டியா, யாருக்கிட்ட சொன்னாலும் ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லி மிரட்டுனதா சொல்லப்படுது.* மருமகனை செல்போனில் பேசி கண்டித்த மாமியார் அபயா* அடாசியை செல்போனில் அழைத்து மிரட்டிய சந்தன்கடந்த ரெண்டு மூணு நாளாவே சந்தன், அடாசிக்கு ஃபோன் பண்ணி, தகாத வார்த்தைகளால பேசுனதாவும், கொலை மிரட்டல் விடுத்ததாவும் சொல்லப்படுது. சம்பவம் நடந்த முன்னாடி நாள் நைட்டு கூட மனைவி அடாசி, தன்னோட கணவர் பண்ற அட்டூழியங்கள தாங்கிக்க முடியலன்னு சொல்லி, தாய்க்கிட்ட கதறி அழுதுட்டுதான் தூங்க போய்ருக்காங்க. ஆனா, விரக்தியோட உச்சத்துல இருந்த அடாசி, தன்னோட உயிர மாய்ச்சிக்கிட்டாங்க.* அடாசியை ஆபாச வார்த்தைகளால் திட்டிய கணவன்* உயிரை மாய்த்துக் கொண்ட அடாசி* கணவனின் கொடுமை தாங்க முடியாமல் விபரீத முடிவு* அடாசியின் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணைஅடாசியோட இந்த விபரீத முடிவுக்கு, அவங்களோட கணவன் சந்தன்தான் காரணம்னும், கணவன் சந்தன அரெஸ்ட் பண்ற வரைக்கும் சடலத்த வாங்கிக்க மாட்டோம்னு சொல்லி, அடாசியோட பெற்றோரும், உறவினர்களும் போராட்டத்துல ஈடுபட்டாங்க. அப்போ, பெத்த மகள பறிகொடுத்த வேதனையில, அடாசியோட தாய் அபயா கதறி துடிச்சது, அங்க இருந்தவர்களை கண்கலங்க செய்தது. கல்யாணம் முடிஞ்ச ரெண்டே மாசத்துல, புதுப்பெண் உயிர மாய்ச்சுக்கிட்ட சம்பவம் அப்பகுதில பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திருக்கு. அடாசியோட மரணம் சம்பந்தமா வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ், சந்தன பிடிச்சு விசாரணை நடத்திட்டு இருக்காங்க. Related Link அடுத்தவரின் மனைவியுடன் இல்லீகல்