கர்நாடகா... வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி மாயம். மகளை பல இடங்களில் தேடி அலைந்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி. உடலில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்த மகளை பார்த்து கதறிய பெற்றோர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சிறுமியை வன்கொடுமை செய்த கொடூரன். வக்கிர புத்தி கொண்ட பக்கத்து வீட்டுக்காரனை கைது செய்ததா போலீஸ்? நடந்தது என்ன?வீட்டு வாசல்ல விளையாடிட்டு இருந்த 6 வயது சிறுமிய காணுமேன்னு பெத்தவங்க பதறிப்போயிருக்காங்க. பக்கத்து வீடு, எதிர்த்த வீடுன்னு சுத்தி முத்தி உள்ள எல்லா இடத்துலயும் தேடியும், சிறுமி கிடைக்கவே இல்ல. அடுத்த முயற்சியா, நைட்டு போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காங்க. அதுக்கப்புறம், உறவினர்களும், போலீஸும் விடிய விடிய சிறுமிய தேடி அலைஞ்சிருக்காங்க. அந்த நேரத்துல, அங்க உள்ள வடிகால்ல, ஒரு சிறுமி மூச்சு பேச்சு இல்லாம கிடக்குறதா போலீஸுக்கு தகவல் வந்திருக்கு. உடனே அங்க போய் பாத்தா, உயிரிழந்து கிடக்குறது, காணாம போன சிறுமின்னு தெரியவந்துருக்கு. அவங்களோட உடம்புல அங்க அங்க ரத்தக்காயமும் இருந்துருக்கு. இதெல்லாம் பாத்து பதறிப்போன சிறுமியோட தந்தையும், போலீஸ்காரங்களும் வேக வேகமாக சிறுமிய மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு கூப்டு போனாங்க. ஆனா, அங்க பரிசோதனை பண்ணி பாத்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்துட்டதா சொல்லிட்டாங்க. அதோட, சிறுமிய அடிச்சு துன்புறுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்குறதாவும், மருத்துவர்கள் சொன்னத கேட்டு பெத்தவங்க துடிதுடிச்சு போயிட்டாங்க. ஏராளமான மக்கள் குடியிருக்குற ஏரியாவுல, சிறுமிய கடத்திட்டு போய் பாலியல் வன்கொடுமை செஞ்சு, துடிக்க துடிக்க கொன்னு, உடல வடிகால்ல வீசுனது யாருங்குறத கண்டுபிடிக்க போலீஸ் தீவிர விசாரணையில இறங்குனாங்க.சிறுமி இறந்து கிடந்த வீட்டுல சுமார் 30 வயது மதிக்கத்கக்க இளைஞர் ஒருத்தரு குடியிருந்துட்டு வரதாகவும், கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் இந்த வீட்டுக்கு குடிவந்ததாவும் சொல்லப்படுது. இந்த வீட்டுக்கு குடி வந்து கொஞ்ச நாள்தான் ஆகுதுங்குறதால, அந்த நபர பத்தின எந்த விவரமும் யாருக்கும் தெரியல. அதே நேரத்துல, அவன் பேரு யூசுப் மீருனும், அவன் மேல ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில இருக்குறதாவும் சொல்லப்படுது. அதனால, அவன் மேல சிறுமியோட அப்பாவுக்கு சந்தேகம் வரவே, போலீஸுக்கிட்ட சொல்லிருக்காரு. கர்நாடக மாநிலம் பெங்களூருல உள்ள ஒயிட்ஃபீல்ட் பகுதிலதான் 6 வயசு சிறுமி தன்னோட பெற்றோர்கூட வாழ்ந்துட்டு இருந்தாங்க. மேற்குவங்கத்த சேர்ந்த அவங்க கடந்த சில மாசங்களுக்கு முன்னாடிதான் பிழைப்புக்காக பெங்களூருக்கு வந்துருக்காங்க. சிறுமியோட அப்பா அதே ஏரியாவுல உள்ள தனியார் கம்பெனில ஹெல்ப்பர் வேலை பாத்துட்டு இருக்காரு.சம்பவத்தனைக்கு, மதிய சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்தப்பகூட ஆறு வயசு மகள் வீட்டு வாசல்ல விளையாடிட்டு இருந்தத பாத்துருக்காரு. அதோட, யூசுப் மீரும் அந்த வழியா சுத்திட்டு இருந்தத கவனிச்ச சிறுமியோட அப்பா பெருசா கண்டுக்காம விட்டுருக்காரு. இந்த சூழல்ல வீட்டு வாசல்ல விளையாடிட்டு இருந்த சிறுமிக்கிட்ட நைசா பேச்சு கொடுத்து கொஞ்சம் தள்ளிருக்குற காலி இடத்துக்கு கூப்பிட்டு போயிருக்கான். அப்படி அங்க போனதும் சிறுமியோட வாயை பொத்தி கொடூரமான முறையில பாலியல் வன்கொடுமை பண்ணிருக்கான். அதுமட்டுமில்லாம, சிறுமிய அப்படியே விட்டா வெளிய போய் சொல்லிடும்னு, நினைச்சு சிறுமிய கீழ தள்ளி, கழுத்த நெரிச்சுருக்கான் யூசுப் மீர். ஆனா, அப்பவும் உயிர் போகலங்குறதால, சிறுமியோட கழுத்த பின்பக்கமா நின்னு பிடிச்சு, தரையில உள்ள கற்கள் மேல ஓங்கி அடிச்சிருக்கான். இதுல, அதிகபடியான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்துலேயே உயிரிழந்துட்டாங்க அந்த சிறுமி. அதுக்கப்புறம், அங்க இருந்து புறப்பட்ட யூசுப் மீர், எதுவுமே நடக்காத மாதிரி அவன் வீட்டுல போய் இருந்துருக்கான். சிறுமியோட அப்பா கொடுத்த புகார வச்சு அந்த யூசப் மீர பிடிச்சு விசாரிச்சதுல, சிறுமிய பாலியல் வன்கொடுமை பண்ணி, கொலை பண்ணது தான்தான்னு எல்லா உண்மையையும் சொல்லிருக்கான். அடுத்து, யூசுப் மீர் மேல கொலை வழக்குப்பதிவு பண்ண காவல்துறையினர் அவன கைது பண்ணி சிறையில தள்ளிருக்காங்க. இதையும் பாருங்கள் - ஜாமினில் வந்தவருக்கு பக்கா ஸ்கெட்ச்