திரிபுராவின் செபாகிஜாலா ((Sepahijala)) மாவட்டத்தில் சட்டவிரோதமாக பயிர் செய்யப்பட்டிருந்த 5 லட்சம் கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர். சோனாமுரா ((Sonamura)) உட்பகுதியின் துலுங்கா ((Tulunga)) காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, 170 ஏக்கரை உள்ளடக்கிய வனப்பகுதியில், 92 இடங்களில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை கண்டறிந்து, அந்தந்த இடத்திலேயே பிடுங்கி தீ வைத்து அழிக்கப்பட்டது. இதனிடையே அழிக்கப்பட்ட கஞ்சா செடிகளின் சந்தை மதிப்பு 75 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். Related Link காரில் இருந்தபடியே ஃப்ளையிங் கிஸ் கொடுத்த இளைஞர்