உடல் உறுப்புகளை தானம் செய்துவிடுங்கள் என கடிதம் எழுதி வைத்துவிட்டு டெல்லியில் 16 வயது பள்ளி மாணவன் மெட்ரோ ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தன்னை பள்ளி ஆசிரியர்கள் மன ரீதியாக துன்புறுத்தி வந்ததாக தனது கடிதத்தில் குற்றம்சாட்டிய மாணவன், தற்கொலை முடிவை எடுத்ததற்கு தனது பெற்றோரிடமும், சகோதரரிடமும் மன்னிப்பை கேட்டுக்கொண்டார். மேலும், தனது உடல் உறுப்புகள் செயல்பாட்டில் இருந்தால் தேவைப்படுவோருக்கு வழங்கவும் மாணவன் உருக்கமாக எழுதி வைத்துள்ளார். இந்நிலையில், பள்ளி ஆசிரியர்கள் தனது மகனை தொடர்ந்து அவமானப்படுத்தி வந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.