நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், இதற்காக சதி செய்த பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தினார். டெல்லியில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் நீதிமன்றத்தின் மறுப்பானது மோடி மற்றும் அமித் ஷாவின் முகத்தில் விழுந்த அடி என கூறினார்.சோனியா மற்றும் ராகுலை அரசியல் ரீதியாக பழிவாங்கும் திட்டத்துடன் நேஷனல் ஹெரால்டு வழக்கு புனையப்பட்டதாக கார்கே குற்றஞ்சாட்டினார். 1938 ல் விடுதலை போராட்ட தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையுடன் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை இணைத்து அதை அவமதிக்கும் செயல்கள் நடப்பதாகவும் கார்கே கண்டனம் தெரிவித்தார்.