தலைநகர் டெல்லியின் சில பகுதிகளில் இன்று காலை கடும் மூடுபனி நிலவியது. குறிப்பாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மஹிபால்பூரில் சாலைகளே தெரியாத அளவுக்கு கடும் மூடுபனி நிலவியது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சாலையில் ஊர்ந்து சென்றன.இப்பகுதியில் கடும் மூடுபனி நிலவியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இப்பகுதியில் காற்றின் தரக் குறியீடு 134 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. Related Link செருப்பு, துடைப்பத்துடன் தே.மு.தி.க. நிர்வாகி வீடியோ