Also Watch
Read this
By: Web Team

அமைதியை ஆயுதங்களால் சீர்குலைப்பவர்களுக்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என நக்சலைட்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள ஜக்தல்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் தெளிவுபடுத்துவதாக தெரிவித்தார்.
மேலும், சில நக்சலைட்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அவர்களுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது? எனவும் கேள்வி எழுப்பியவர், நக்சலைட்கள் அனைவரும் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வந்து சரணடைய வேண்டும் என்றார்.