கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமய்யாவை மாற்றி விட்டு, ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்த த்தின் படி துணை முதல்வர் டிகே சிவகுமாரை முதல்வராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால், மாநில காங்கிரசில் உட்கட்சி பூசல் விசுவரூபம் எடுத்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி சிவகுமார் ஆதரவு எம்எல்ஏக்கள் 10 பேர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். என்ன நடந்தாலும் சரி பதவியை விட்டுத் தர மாட்டேன் என சித்தராமய்யா பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், டிகே சிவகுமார் வெளியிட்ட பதிவு சர்ச்சையை அதிகரித்துள்ளது. அதில் கடின உழைப்பு பலன் தரும் எனவும், பக்தி இருந்தால் கடவுளை காணலாம் எனவும் அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே சித்தராமய்யா நீக்கப்பட்டால் முதலமைச்சர் இடத்துக்கு பட்டியலினத்தவரை நியமிக்க வேண்டும் எனவும் ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.