ஆந்திரா... மீன் காய வைக்கும் இடத்தில் பாதி அழுகிய நிலையில் கிடந்த தனியார் ஊழியரின் சடலம். சடலத்தை மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பிய போலீஸ். கழுத்தில் காயங்கள் இருந்ததாக வெளியான ரிப்போர்ட். மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து கஸ்டடியில் எடுத்த போலீஸ். விசாரணையில் வெளியான பகீர் தகவல். தனியார் ஊழியர் கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?டிசம்பர் 2025. மகன் நாகராஜ்க்கு ஃபோன் பண்ணிருக்காரு அவரோட தந்தை. அப்ப நாகராஜோட ஃபோன் ஸ்விட்ச் ஆப்ல இருந்துருக்கு. இதனால அந்த நபர் மருமகள் ரம்யாவுக்கு ஃபோன் பண்ணிருக்காரு. அப்ப உடனே அந்த ஃபோன எடுத்த ரம்யா கிட்ட, நாகராஜ் என்ன பண்றான், அவன் ஃபோன் ஏன் ஸ்விட்ச் ஆப்ல இருக்குதுன்ன கேட்ருக்காரு. அதுக்கு உங்க மகன் ஒரு வாரத்துக்கு முன்னாடி என்னோட நகையெல்லாத்தையும் எடுத்துட்டு எங்கையோ ஓடி போய்ட்டான்னு சொல்லிருக்காங்க ரம்யா. அதுக்கு மாமனார், நீ எதுக்கு இத முன்னாடியே எங்க கிட்ட சொல்லலன்னு கேட்ருக்காங்க. அதுக்கு ரம்யா, உங்க மகன் மேல ரொம்ப கோவமா இருந்தேன் அதனால இத யார் கிட்டயும் சொல்லலன்னு சொல்லிருக்காங்க. அதுக்கப்புறம் நாகராஜோட தந்தை, அங்குள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல மகன காணும்ன்னு புகார் அளிச்சுட்டாரு. உடனே அந்த புகார வாங்குன போலீஸ் விசாரணையில இறங்குனாங்க. நாகராஜ் எங்க போனாரு, என்னா ஆனாருன்னு தெரிஞ்சுக்க அங்குள்ள சிசிடிவி காட்சிகள எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க. அதில் எந்த ஒரு துப்பும் கிடைக்கல.இதுக்கிடையில கணவன் காணாம போனது தொடர்பா முகத்துல எந்த ஒரு சோகமும் இல்லாம ஜாலியா சுத்திக்கிட்டு இருந்துருக்காங்க ரம்யா. இதனால ரம்யா மேல சந்தேகப்பட்ட போலீஸ் அவங்களோட நடவடிக்கைய நோட் பண்ண ஆரம்பிச்சுருக்காங்க. இதுக்கிடையில திம்மாபுரம் பகுதியில இருந்து போலீஸ்க்கு ஃபோன் ஒன்னு வந்துருக்கு. அப்ப எதிர்முனையில பேசுன ஒருத்தரு, சார் இங்க பாதி அழுகுன நிலையில சடலம் ஒன்னு கிடக்குதுன்னு சொல்லிருக்காரு. இதகேட்ட போலீஸ், உடனே அங்க போய் விசாரணையில இறங்குனாங்க. அதுல தான் உயிரிழந்தது நாகராஜ்ன்னு தெரியவந்துருக்கு. அதுக்கப்புறம் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்ச போலீஸ் முதல்ல ரம்யாவ தங்களோட கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க. அப்புறம் அவங்களோட செல்போன் கால் லிஸ்ட் எல்லாத்தையும் எடுத்தும் பாத்துருக்காங்க. அதுல ரம்யா, வசந்தராவ்-ங்குற இளைஞர் கூட அதிகமா ஃபோன் பேசியிருந்தது தெரியவந்துருக்கு. இதுக்கிடையில வெளியான போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல நாகராஜ் கழுத்துல காயங்கள் இருந்ததா குறிப்பிட்டு இருந்துச்சு. இதனால ரம்யா கிட்ட கிடுக்குப்பிடி விசாரணையில இறங்குனாங்க. ஆந்திராவுல உள்ள கரிவிடி பகுதியைச் சேந்த நாகராஜ் - ரம்யா தம்பதிக்கு 14 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணமாகிருக்கு. இந்த தம்பதிக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. நாகராஜ் ஒரு ப்ரைவேட் கம்பெனியில வேலை பாத்துட்டு இருக்காரு. நாகராஜும் அவரோட கம்பெனியில வேலை பாக்குற வசந்தராவ்வும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள். இதனால வசந்தராவ் கிட்ட நாகராஜ் கடன் வாங்கியிருந்ததா கூறப்படுது. அதே மாதிரி வசந்தராவ்வும் அடிக்கடி நாகராஜோட வீட்டுக்கு போகுறத வழக்கமா வச்சுருந்துருக்காரு. அப்ப வசந்தராவ்வுக்கும் - ரம்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கு. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் ஜாலியா ஊர் சுத்திட்டு, அடிக்கடி தனிமையிலையும் இருந்துருக்காங்க.ஆனா அடுத்து கொஞ்சம் நாட்கள்லையே இந்த விஷயம் நாகராஜ்க்கு தெரியவந்துருக்கு. இதனால மனைவிய போட்டு சரமாரியா தாக்குன நாகராஜ், நமக்கு ரெண்டு குழந்தைங்க இருக்கு, அவங்களோட எதிர்காலத்த நினைச்சு பாக்காம நீ இந்த மாதிரி வேண்டாத வேலையெல்லாத்தையும் பண்ணிட்டு இருந்தன்னா, குடும்பத்தோட மானமே போய்ரும்ன்னு அட்வைஸ் பண்ணிருக்காரு. ஆனா ரம்யா திருந்துற மாதிரி தெரியல. அதுக்கப்புறம் வசந்தராவ்வுக்கு ஃபோன் பண்ண ரம்யா, நம்ம கள்ளக்காதல் விஷயம் நாகராஜ்க்கு தெரிஞ்சுருச்சு, அவன் உயிரோட இருக்குற வர்ற நம்ம நிம்மதியா இருக்க முடியாது, அதனால நாகராஜ்ஜ கொலை பண்ணியே தீரனும்ன்னு முடிவு பண்ணிருக்காங்க. அதுபடி தன்னோட நண்பர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய கொடுத்த வசந்தராவ் கொலைக்காக ஸ்கெட்சையும் போட்ருக்காரு.சம்பவத்தன்னைக்கு நாகராஜோட வீட்டுக்கு போன வசந்தராவ், அவர திம்மாபுரம் பகுதிக்கு கூப்டு போய்ருக்காரு. அப்ப அங்கருந்த கூலிப்படை குரூப், நாகராஜ சரமாரியா தாக்கி கழுத்த நெரிச்சு கொன்னுருக்காங்க. அடுத்து சடலத்த அங்குள்ள ஒரு மீன்கள் காயவைக்குற இடத்துல தூக்கி வீசிட்டாங்க. ஏன்னா, அங்கதான் துர்நாற்றம் அதிகமாக வீசும், போலீசால சடலத்த கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சு அங்க வீசிட்டு தப்பிச்சு போய்ட்டாங்க. அதுக்கப்புறம் ரம்யா வீட்டையும் காலி பண்ணிட்டு அங்கருந்து வேற பகுதிக்கு போய்ட்டாங்க. ஆனா போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் மூலமாவும், ரம்யாவோட நடவடிக்கை மூலமாவும் உண்மையை கண்டுபிடிச்ச போலீஸ், வசந்தராவ், ரம்யா அவரோட நண்பர்கள்னு எல்லாரையும் அரெஸ்ட் பண்ண போலீஸ் அவங்கள கம்பி எண்ண வச்சுருக்காங்க. இதையும் பாருங்கள் - தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவன்