யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இந்தியாவின் தொன்மை வாய்ந்த தீபாவளி பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்திருக்கிறார். பிரதமர் மோடியின் பதவி காலத்தில் இந்திய கலாச்சார பாரம்பரியங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலக அளவில் சிறப்பு அங்கீகாரம் கிடைக்கப்பெற்று வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்திருக்கிறார். யுனெஸ்கோ பட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்க்கப்பட்டது பாஜக ஆட்சியின் மற்றுமொரு மைல்கல் என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.