இந்தியா புதிய விஷயங்களைச் சோதனை செய்வதற்கான ஆய்வுக்கூடம் என பில் கேட்ஸ் கூறியதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளது. சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இன்னும் 20 வருடங்களில் இந்தியர்கள் நன்றாக முன்னேறி இருப்பார்கள் எனவும், அது மட்டுமல்லாமல் இந்தியா புதியவற்றை செய்து பார்க்கும் ஆய்வு கூடம் போன்றது எனவும், அங்கு நிரூபனம் ஆன பிறகு அவற்றை நாடுகளுக்கு எடுத்து செல்லலாம் என்று தெரிவித்திருந்தார்.