மியான்மர் சைபர் மோசடி மையத்தில் சிக்கி வலுக்கட்டாயமாக வேலை பார்த்து வந்த இந்தியர்கள் 500 பேரில் முதற்கட்டமாக 270 பேர் நாடு திரும்பினர். மீதமுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக மத்திய அரசு இன்று கூடுதல் விமானங்களை இயக்க உள்ளது. மியான்மரில் உலக மோசடிகளின் தலைநகரம் என அழைக்கப்படும் மியாவாட்டி பகுதி உள்ளது. வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பிக்கும் அப்பாவிகளை வரவழைத்து அவர்களை மிரட்டி சைபர் வேலையில் ஈடுபடுத்தும் துணிகர செயலை சர்வதேச மாபியா கும்பல் செய்து வருகிறது.