இண்டிகோ நிறுவன விமான சேவைகளில் ஏற்பட்டுள்ள கோளாறால், தனது தந்தையின் அஸ்தியை ஹரித்வாரில் கரைப்பதற்காக கொண்டு சென்ற பெண் ஒருவர் பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கி தவித்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மற்ற விமான சேவை நிறுவனங்கள் டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்தியுள்ளதால் செய்வதறியாது தவித்த அந்த பெண், அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.