news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews இரும்பு எஃகு ஆலை விபத்து - பிரதமர் மோடி இரங்கல்
tv

Also Watch

tv

Read this

இரும்பு எஃகு ஆலை விபத்து - பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் மோடி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதமர் இரங்கல்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் :

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரும்பு எஃகு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு, CBSE பொதுத்தேர்வு மோசடி விவகாரம்?

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் CBSE பொதுத்தேர்வு மோசடி விவகாரத்தை சுட்டிக் காட்டி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலில் வாக்குத் திருட்டு மற்றும் SIR பணிகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்திட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து கடிதம் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கார்கே கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 20 பேர் பாஜகவுக்கு ஆதரவு :

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களில் 20 பேர் பாஜக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மக்களவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதால் மேற்குவங்க அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் எம்.பி. ககோலி கோஷ் தஸ்திதார், தாம் உள்பட 20 எம்.பி.க்கள் தனி அணியாக செயல்படுவதுடன், தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மீண்டும் போராட்டம் :

நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த 6 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், வரும் 11ஆம் தேதி மீண்டும் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி அக்கட்சியினர் நடத்திய போராட்டம் பேசுபொருளானது.

75 முதல் 80 நாட்கள் வரை எரிபொருள் கையிருப்பு உள்ளது :

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்து 75 முதல் 80 நாட்கள் வரை இந்தியாவிடம் எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் விலை நீண்ட காலத்திற்கு உயர்ந்தே இருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Link
H-1B விசா கட்டண உயர்வு ரத்து, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

H-1B விசா கட்டண உயர்வு ரத்து, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
1 hr 53 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved