டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில், மத்திய குழுவில் உள்ள தலைவர், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர், துணைத் தலைவர் பதவி என்ற மொத்தம் 4 இடங்களையும் இடதுசாரி கூட்டணி வென்றது. கடந்த ஆண்டு, இடதுசாரி மாணவர் அமைப்புகள் மூன்று இடங்களை வென்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 4 இடங்களையும் வென்றடுள்ளன. எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி அமைப்பான ஆர்எஸ்எஸ்-இன் மாணவர் அணியான ஏபிவிபி படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு கையில் வைத்திருந்த இணை செயலாளர் பதவியையும் ஏபிவிபி ((abvp)) இந்த ஆண்டு பறிகொடுத்தது.