அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பைடன் விரைந்து குணமடைய வேண்டும் என தமது பிரார்த்தனையையும் தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் தளத்தில் இதை பதிவிட்டுள்ள மோடி,பைடனின் மனைவி ஜில் பைடன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் பைடனுக்கு சிறுநீர் பாதையில் உள்ள புரோஸ்டேட் சுரப்பியில் உருவான கேன்சர் முற்றிய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.இந்த கேன்சர் அவரது எலும்புகளையும் பாதித்துள்ளதாக தெரிகிறது 82 வயதான பைடன் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி சிகிச்சை பெற்று வருவதாக அவரது அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.