முன்பகை காரணமாக கொலை : டெல்லியின் ரோகினி செக்டார்- 17 பகுதியில், சஹில் என்ற நபர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்ற வழக்கு ஒன்று தொடர்பாக சிறையில் இருந்த சஹில் சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சாலையில் நடந்து சென்ற சஹிலை, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியுள்ள நிலையில், முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். Related Link பிரதமாராகும் தாரிக் ரஹ்மானுக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து